×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி

அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சரிந்துள்ளது. ன்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஒசூர், சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பூக்கள் வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.1,200க்கும் ஐஸ் மல்லி 1000 க்கும் காட்டு மல்லி 450 க்கும் ஜாதி மல்லி 600க்கும் முல்லை 750க்கும் கனகாம்பரம் 500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல் அரளி பூ 150 க்கும் சாமந்தி 180 க்கும் சம்பங்கி 120 க்கும் பன்னீர்ரோஸ், சாக்லேட் ரோஸ் 100க்கும் விற்பனை செய்யப்பட்டது. சேஷ நாட்கள் மற்றும் முகூர்த்தநாள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை அனைத்து பூக்களின் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.250 க்கும் ஐஸ் மல்லி 200 க்கும் காட்டு மல்லி 150 க்கும் முல்லை, ஜாதி மல்லி, கனகாம்பரம் ஆகியவை 300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி பூ 80 க்கும் சாமந்தி 100க்கும் சம்பங்கி, பன்னீர்ரோஸ் 30 க்கும் சாக்லேட் ரோஸ் 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். வருகின்ற 9ம் தேதி அமாவாசை முன்னிட்டு மீண்டும் அனைத்து பூக்களின் விலை உயரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Annanagar ,Koyambedu ,Nnai ,Dindigul ,Madurai ,Vellore ,Nilakottai ,Trichy ,Hosur ,Salem ,Karnataka ,Andhra Pradesh ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...