×

போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்..!!

சென்னை: 30 கிலோ போதைப்பொருள் கடத்திய வழக்கில் மோனிஷா ஷீலா, ஜோசப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, பிள்ளமன் பிரகாஷ் என்பவரை அதிகாரிகள் டெல்லியில் இருந்து பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில், சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிள்ளமன் பிரகாஷ் ஏறிய நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட அவரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 2 பைகளில் சுமார் 180 கோடி மதிப்பிலான 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் வகை போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. மதுரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் பிள்ளமன் பிரகாஷ் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தொடர் விசாரணையில் அவரது வீடு உள்ள சென்னை கொடுங்கையூரில் 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் மனைவி மோனிஷா கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து உடந்தையாக இருந்த ஜேசுதாஸும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இருவரும் மதுரையில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது; 6 கிலோ மெத்தபெட்டமைன் பிடிபட்ட வழக்கில் கைதான அவரின் மனைவி ஷீலா மற்றும் உடந்தையாக இருந்த ஜேசுதாஸ் இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Monisha Sheela ,Joseph ,Central Revenue Division Investigation Department ,Pillaman Prakash ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...