×

காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்

வாஷிங்டன்: காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வலியுறுத்தி உள்ளார். மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு உதவிசெய்ய உடனடியாக போர் நிறுத்தம் செய்ய கமலா ஹாரிஸ் வலியுறுத்தி உள்ளார்.

இஸ்ரேல் மீது காசாவில் இருந்து கடந்த அக்.7ம் தேதி ஹமாஸ் அமைப்பு போர் நடத்தியது. அந்த போரில் 1,400 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதல் நடத்தியது. இதில் காசாவில் 30,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

போரை நிறுத்த ஐ.நா. சபையில் போர்நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அமெரிக்கா தனது வீட்டா அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மீது  பல தரப்பினரிடையே எதிர் கருத்துக்கள் எழுந்தது.

இந்நிலையில் காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வலியுறுத்தி உள்ளார். மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு உதவிசெய்ய உடனடியாக போர் நிறுத்தம் செய்ய கமலா ஹாரிஸ் வலியுறுத்தி உள்ளார்.

“காசாவில் ஒவ்வொரு நாளும் நாம் பார்ப்பது பேரழிவை ஏற்படுத்துகிறது, மேலும் நமது பொதுவான மனிதநேயம் நம்மை செயல்படத் தூண்டுகிறது. காசாவில் பெரும் துன்பம் ஏற்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்சம் அடுத்த ஆறு வாரங்களுக்கு உடனடியாக போர் நிறுத்தம் இருக்க வேண்டும்” எனவும் கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : US ,Vice President ,Kamala Harris ,Israel ,Gaza ,Washington ,US Vice President ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!