- திமுக
- தஞ்சாவூர்
- தமிழ்நாடு பலவீன விவசாயிகள்
- மாவட்ட நிர்வாகக் குழு
- மாவட்ட செயலாளர்
- முகமது வாகி மன்சூர்
- பலவீனமான பண்ணை
தஞ்சாவூா், மார்ச் 4: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகமது வகி மன்சூர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜான் போஸ்கோ வரவேற்றார். அமைப்பாளர் ரவி மாதவன், துணை தலைவர் சின்ன குஞ்சு, ஒன்றிய அமைப்பு சாரா செயலாளர் சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, தஞ்சாவூர் -அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் மிகப்பெரிய திட்டமான பாபநாசம் வட்டம் கருப்பூர் குடிகாடு என்ற இடத்தில் கொள்ளிடத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக், அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகளிர் அணி செயலாளர் ஜேஸ்மேரி நன்றி கூறினார்.
The post 1,59,716 குழந்தைகளுக்கு போலியோ மருந்து நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு நலிவுற்ற விவசாயிகள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.