×
Saravana Stores

அரியலூர் மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருது பெற தலைப்புகள் அறிவிப்பு விண்ணப்பிக்க ஏப்.15 கடைசி நாள்

அரியலூர், மார்ச் 4: பசுமை சாம்பியன் விருது பெறுவதற்கான தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள் (அமைப்புகள்) / கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

1.சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி 2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு.3.சுற்றுச்சூழல் பாதுகாப்பு
4.பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்.5.நிலைத்த வளர்ச்சி. 6.திடக்கழிவு மேலாண்மை 7.நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு 8.காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை. 9.காற்று மாசு குறைத்தல் 10.பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை.11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு.12.கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை.13. பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in < http://www.tnpcb.gov.in/ > என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அரியலூர் அவர்களை அணுகலாம். இந்த விருது பெற விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 15 ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பெண்கள் அனைவரும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மகளிர் இலவசப் பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

The post அரியலூர் மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருது பெற தலைப்புகள் அறிவிப்பு விண்ணப்பிக்க ஏப்.15 கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Ariyalur District ,Ariyalur ,Annie Mary Swarna ,Tamil Nadu Government ,Environmental Climate Change ,Forest Department ,Environmental Protection ,
× RELATED உடையார்பாளையம் பேரூராட்சியில் போதை...