×

387 மையங்களில் முகாம் நடைபெற்றது அரியலூர் ரயில் நிலையத்தில் பலகோடி ரூபாய் செலவிட்டும் அடிப்படை வசதிகள் இல்லை

அரியலூர், மார்ச் 4: அரியலூர் ரயில் நிலையத்தில் அம்ருத்பாரத் திட்டத்தில் பல கோடிகள் செலவிட்டும் அடிப்படை வசதிகள் இல்லை என்று ரயில் பயணிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். சென்னை- கன்னியாகுமரி இருவழி இருப்பு பாதையில் அரியலூர் ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாகும். வைகை, பல்லவன், குருவாயூர் உட்பட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. பயணிகள் டிக்கெட் ஆண்டுக்கு ரூ. 7 கோடிக்கு மேல் விற்பனை ஆகிறது. அரியலூர் ரயில் நிலையம் தொடங்கி 95 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

கடந்த ஆண்டு அரியலூர் ரயில் நிலையம் அம்ருத்பாரத் ரயில் நிலையம் மேம்படுத்தும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி பல பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரியலூர் ரயில் நிலையத்தில் மூன்று 650 மீட்டர் நீளம் உள்ள நடைமேடைகள் உள்ளன. இவற்றில் மழை, வெயில்,பனி காலத்தில் பயணிகள் பாதுகாப்பாக நிற்க முடியாத நிலை இருந்தது. தற்போது மூன்று நடைமேடைகளிலும் மேற்கூரை அமைக்கப்படுகிறது. வந்து செல்லும் ரயில் பெட்டிகள் பற்றிய எலெக்ட்ரானிக்ஸ் டிஜிட்டல் தகவல் போர்டுகள், ஏராளமான சிசி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையம் முன்புறம் அழகுபடுத்தும் பணியும் வேகமாக நடைபெறுகிறது. இந்நிலையில் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் தற்போது இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் ரயில் நிலையம் முன்பு நிறுத்த இடங்கள் ஒதுக்கிய போதிலும் இந்த இடங்கள் குறைந்த அளவிலேயே உள்ளது. கட்டணம் செலுத்தி நிறுத்தும் இருசக்கர பார்கிங் தற்போது இட நெருக்கடியில் உள்ளது. ரயில் நிலையம் வந்து ரயில்வே டிக்கெட் ரிசர்வ் செய்ய உடனே வந்து உடனே திரும்பும் பயணிகளுக்கு இரு சக்கர, நாலு சக்கர வாகனங்களை கட்டணம் இல்லாமல் நிறுத்த தனியாக அதிகம் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிக பயணிகள் வருவதால் கூடுதலாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கி மேம்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள பெரம்பலூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து ரயில் நிலையம் வரை அணுகு சாலை அமைக்க வில்லை. இந்த அம்ருத் பாரத் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரியலூர் ரயில் நிலையம் வரை அணுகு சாலை அமைத்து இணைக்க வேண்டும் என்று பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். அரியலூர் ரயில் நிலைய முதலாவது நடைமேடையை ஒட்டி 10 லோடு பெரிய பெரிய கருங்கற்கள் கொட்டி வைத்து இருப்பதால் அதில் பாம்புகள் பதுங்கியுள்ளன. அந்த கற்களை உடனே அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

The post 387 மையங்களில் முகாம் நடைபெற்றது அரியலூர் ரயில் நிலையத்தில் பலகோடி ரூபாய் செலவிட்டும் அடிப்படை வசதிகள் இல்லை appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,railway station ,Ariyalur railway station ,Amrutbharat ,Chennai-Kanyakumari ,Dinakaran ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...