×

தென்காசி மாவட்டத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 11 ஆடுகள் பறிமுதல்

சுரண்டை, மார்ச் 4: தென்காசி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 ஆடுகளை பறிமுதல் செய்தனர். சுரண்டை அருகே சாம்பவர்வடகரை ஆகாச மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டமுத்து (44). தொழிலாளியான இவர் தனது வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் பட்ட முத்து மூன்று ஆடுகள் திருடு போனது குறித்து சாம்பவர்வடகரை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஆய்க்குடி எஸ்ஐ நவநீதகிருஷ்ணன், சாம்பவர் வடகரை சிறப்பு எஸ்ஐ முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தென்காசி அருகே இலத்தூர் சிவராம பேட்டையை சேர்ந்த பேச்சிமுத்து (24), முப்புடாதி என்ற குமார் (24) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் இருவரும் சுரண்டை, அச்சன்புதூர், ஆய்க்குடி உட்பட தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்த சாம்பவர் வடகரை போலீசார் அவர்களிடம் இருந்து 11 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

The post தென்காசி மாவட்டத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 11 ஆடுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tenkasi district ,Surandai ,Bhattamuthu ,Akasa Madan Kovil Street, Sampawarwatakarai ,Dinakaran ,
× RELATED சாம்பவர்வடகரையில் இரு ஆண்டுகளுக்கு...