×

நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை : அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

நாகப்பட்டினம்: நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். நாகப்பட்டினத்தில் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அளித்த பேட்டி: தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலைகள் உள்ளிட்டவைகளை சரிசெய்வது சம்பந்தமாக ‘‘நம்ம சாலை’’ என்ற தனியாக செயலி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சாலையை சீரமைக்கப்படுகிறது. இதனால் விரைவாக சாலை செப்பனிடப்படுகிறது. இதுவரை 56 புகார்கள் வந்துள்ளது. இதில், நெடுஞ்சாலை சம்பந்தப்பட்ட 17 சாலைகள் ஆகும். இந்த சாலைகளும் சரிசெய்யப்பட்டுள்ளது. மற்றவைகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி சாலைகளாகும். அந்த சாலையை அந்த துறைகள் மூலம் சீரமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாகை-இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதை ஒன்றிய அரசு செய்து வருகிறது. ஆனால் இடம் உள்ளிட்டவைகள் தயார் செய்து வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி திட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசு தற்போது கடலில் கப்பல் இயக்குவதற்கான சாத்திய கூறு இல்லை என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகுதான் சேவையை தொடங்க முடியும் என்று கூறி உள்ளது. இது சம்பந்தமாக அரசு சார்பில் கடிதமும் எழுதப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பயண கட்டணம் குறைக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே கப்பல் சேவை தொடங்குவதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள், டெக்னிசியன்கள் உள்ளிட்ட ஊழியர்கள் நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை : அமைச்சர் ஏ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sri Lanka ,Minister A.V. Velu ,Nagapattinam ,Minister ,A. V. Velu ,Naga ,Public Works ,AV Velu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...