×

பாஜவில் சேர்வதற்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி நாளை ராஜினாமா

கொல்கத்தா: அரசியலில் குதிப்பதற்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவர் அம்மாநிலத்தில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்திய கல்வி சார்ந்த வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தவர்.

கடந்த ஆண்டு கொரோனாவில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை மறைமுகமாக குறிப்பிட்டு நீதிபதி அபிஜித், ‘‘ இங்கே ஒருவர் 4 மாடி கட்டிடத்தில் வசிக்கிறார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி. இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது?’’ என விமர்சித்தார்.

இந்நிலையில், நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் நேற்று தனது வீட்டின் வெளியே அளித்த பேட்டியில், ‘‘செவ்வாய் கிழமை (நாளை) எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு முறைப்படி அனுப்பி வைப்பேன். அதன் பிறகு எனது எதிர்கால முடிவை அறிவிப்பேன்’’ என்றார். நீதிபதி அபிஜித் பாஜவில் சேருவார் என கூறப்படுகிறது.

The post பாஜவில் சேர்வதற்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி நாளை ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Kolkata High Court ,Bajaj ,Kolkata ,Abhijit Gangobadhyay ,High Court ,of West ,Bengal ,Dinakaran ,
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...