×

பிஎஸ்ஆர் கல்லூரி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

சிவகாசி, மார்ச் 4: உலக கண்ணீர் விழிப்புணர்வு வாரத்தையொட்டி சிவகாசி பிஎஸ்ஆர் கல்லூரி மற்றும் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்ணீர் அழுத்த நோய்க்கான இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனையின் ஆலோசகர் மீனாட்சி, கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் இயக்குநர் அருண்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். டாக்டர் ராம்சுதர்ஷன் முன்னிலை வகித்தார். டாக்டர் ஹரினிகிருஷ்ணா வரவேற்று பேசினார். இந்த முகாமில் டாக்டர் மாதவி தலையிலான குழுவினர் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

நிகழ்ச்சியில் கண்ணீர் அழுத்த நோயின் பாதிப்பு குறித்து டாக்டர் ராமகிருஷ்ணன் பொதுமக்களுக்கு விளக்கினார். அப்போது அவர் இந்த நோயின் பாதிப்பு வெளியில் தெரியாமல் இருக்கும். முழுமையான பரிசோதனையின் மூலமே இந்த நோய் பாதிப்பு தெரியவரும். முறையான பரிசோதனையின் மூலம் கண்ணீர் அழுத்த நோயில் இருந்து விடுபடலாம் என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகாசி பிஎஸ்ஆர் கல்லூரி மற்றும் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post பிஎஸ்ஆர் கல்லூரி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : BSR College ,Sivakasi ,World Tear Awareness Week ,Kovilpatti Aravind ,Eye ,Hospital ,Sivakasi BSR College ,Kovilpatti Aravind Eye Hospital ,Eye Treatment Camp ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து