×

விருதுநகர் மேற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்

 

சிவகாசி, மார்ச் 4: விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என சிவகாசியில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் காஜாசெரீப் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் அதிமுக கூட்டணி அமைந்துள்ளதை வரவேற்றும், விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக முரசு சின்னத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஜெயபாண்டி, மாவட்ட பொருளாளர் முத்துவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டு 3 லட்சத்து 16 ஆயிரத்து 329 வாக்குகள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

The post விருதுநகர் மேற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar West District DMD Executives ,Sivakasi ,DMUD ,Vijaya Prabhakaran ,Virudhunagar ,Virudhunagar West District Demudika ,Chitturajapuram ,Sivakasi… ,Virudhunagar West District Demudika Administrators Meeting ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து