×

3 வேளாண் சட்டத்தை கொண்டு வந்த மோடிக்குஎம்எஸ்பி உத்தரவாத சட்டத்தை கொண்டு வர முடியாதா?.. காங்கிரஸ் கேள்வி

சண்டிகர்: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “விவசாயத்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பாஜ அரசு கடந்த 2020ல் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதை எதிர்த்து விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்தியதால் வேறு வழியில்லாமல் அதனை அரசு திரும்ப பெற்றது.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மோடி அரசு, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தரும் 4வது சட்டத்தை கொண்டு வந்திருந்தால், விவசாயிகள் இப்போது மீண்டும் ஏன் போராடுகின்றனர்? அரசுக்கு இப்போதும் நேரமுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

The post 3 வேளாண் சட்டத்தை கொண்டு வந்த மோடிக்குஎம்எஸ்பி உத்தரவாத சட்டத்தை கொண்டு வர முடியாதா?.. காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : 3 ,Can't Modi ,Congress ,Chandigarh ,chief minister ,Ariana ,Bhupender Singh Hooda ,Congress party ,Dinakaran ,
× RELATED காங்.கில் இருந்து விலகிய 3 அரசியல் பிரமுகர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு