×

இளம் தலைமுறையை பாதிப்பதால் அனைத்து சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்: பாக். செனட் சபையில் தீர்மானம் தாக்கல்

இஸ்லாமாபாத்: அனைத்து சமூக வலைதளங்களுக்கும் நிரந்த தடை விதிக்க கோரி பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப் சாட், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக மாறி விட்டது. இந்த சமூக வலைதளங்களால் பயன்களும், பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானில் சமூக வலைதளங்களை நிரந்தரமாக தடை செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் செனட் சபையில் செனட் உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், “சமூக ஊடகங்கள் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீர்குலைக்கின்றன. பாகிஸ்தான் ஆயுத படைகளுக்கு எதிராக, தீங்கிழைக்கும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. நமது மதம், கலாச்சாரத்துக்கு எதிரான கருத்துகளை பரப்ப, நாட்டின் நலன்களுக்கு எதிராக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இளம் தலைமுறையை பேரழிவில் இருந்து காப்பாற்ற ஃபேஸ்புக், டிக்டாக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களையும் தடை செய்யும்படி அரசாங்கத்துக்கு செனட் சபை பரிந்துரைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார். இந்த தீர்மானம் மீது நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது.

The post இளம் தலைமுறையை பாதிப்பதால் அனைத்து சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்: பாக். செனட் சபையில் தீர்மானம் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Senate ,Islamabad ,Senate of Pakistan ,Facebook ,Twitter ,Snapchat ,YouTube ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா