×

பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

 

தொண்டி, மார்ச் 4: பள்ளி மாணவ,மாணவியருக்கு ஆதார் அட்டை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இது வீண் சிரமத்தை ஏற்படுத்துவதால், பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார் அட்டை எடுத்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தால் அதை புதுப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆதார் சேவை மையங்களில் கடுமையான கூட்டமாக உள்ளது. காலையில் டோக்கன் வாங்கினால் மாலை தான் வேலை முடிகிறது. இதனால் ஒரு நாள் முழுவதும் வீணாகிறது.

சில நேரங்களில் அடுத்த நாளும் செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு முகாம் அமைத்து ஆதார் குறித்த அனைத்து பிரச்னைகளையும் சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தொண்டி செய்யது மும்மது, அரசினர் மேல் நிலைப்பள்ளி பிடிஏ தலைவர் கல்யாணி ஆனந்த் கூறியது, தற்போது ஆதார் புதுப்பித்தலை கட்டாயப் படுத்தியுள்ளனர். இதனால் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். லீவு எடுத்துச் செல்கின்றனர். அதனால் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Thondi ,Seva ,Kendra ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம்...