×

கிருதுமால் நதி தரைப்பாலம் சேதம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

 

சாயல்குடி, மார்ச் 4: கமுதி அருகே சேதமடைந்த கிருதுமால்நதி தரைப்பாலத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கமுதி அருகே மருதங்கநல்லூரில் இருந்து ஆனையூர் செல்லும் வழியில் சாலையின் குறுக்கே கிருதுமால் நதி தரைப்பாலம் அமைந்துள்ளது. மருதங்கநல்லூர், சின்ன ஆனையூர், பெரிய ஆனையூர், புளியங்குளம், கடம்பன்குளம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், பள்ளி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் விவசாய இடுபொருட்கள், கட்டுமான பணிகளுக்கும் பொருட்களை இப்பாலத்தின் வழியாக வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். பாலத்தின் இருபக்கமும் கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. தரைப்பாலத்தின் மேற்பகுதியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சு மற்றும் முண்டு கற்கள் இடிந்தும், உறுதி தன்மையை இழந்துள்ளது.

இதனால் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்தாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த கிருதுமால்நதி தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிருதுமால் நதி தரைப்பாலம் சேதம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kirtumal river ,Sayalgudi ,Kirtumal river footbridge ,Kamudi ,Kritumal river footbridge ,Maruthanganallur ,Anayur ,Chinna ,Anaiyur ,Periya ,Kritumal river ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்