×

ரூ.33 கோடி மதிப்பில் வேடங்கிநல்லூரில் நவீன பேருந்து நிலைய கட்டுமான பணி: ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு

 

திருவள்ளூர், மார்ச் 4: திருவள்ளூர் நகராட்சி வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்காக திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வேடங்கிநல்லூர் பகுதியில் ஐசிஎம்ஆர் அருகில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.33 கோடி மதிப்பில் கட்டுமான பணிகளுக்காக கடந்த ஜூலை மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.

இந்த பேருந்து நிலையம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையின் அடிப்படையிலும் ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கியது. இதற்காண பணிகள் 15 மாதத்தில் நிறைவடையும் என்று கலெக்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், ரமேஷ், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் நேதாஜி, நகராட்சி பொறியாளர் நடராஜன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ரூ.33 கோடி மதிப்பில் வேடங்கிநல்லூரில் நவீன பேருந்து நிலைய கட்டுமான பணி: ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vedanginallur ,Rajendran MLA ,Tiruvallur ,VG ,Tiruvallur Municipality ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை...