×

வரும் 10ம் தேதிக்குள் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணைகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அறிவிப்பு

 

திருவள்ளூர், மார்ச் 4: கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் சட்டம் 2005-ன் கீழ், கடலோர மாவட்டங்களில் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணைகள் அனைத்தும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் சட்ட திருத்தம் 2023 பிரிவு 13-ன் படி, கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரிவு 14-ன் படி, கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு பெறாமல் இயங்கி வரும் இறால் பண்ணைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட கடலோர பகுதிகளில் பதிவு செய்யாமல் இயங்கிவரும் உவர்நீர் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் தொடர்ந்து கண்காணிக்கவும் ஆணையர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ஆணையம் கட்டுப்பாட்டில் வரும் கடற்கரையிலிருந்து 2 கி.மீ வரை உள்ள பகுதிக்குள் உள்ள பதிவு பெறாமல் இயங்கி வரும் உவர்நீர் இறால் பண்ணை உரிமையாளர்கள் வரும் 10ம் தேதிக்குள் உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்.5, சங்கர் நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி என்ற முகவரியில் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் அலுவலகத்தையோ அல்லது எண்.044 – 27972457 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில் தங்களின் உவர்நீர் இறால் பண்ணைகளை ஆணையத்தின் சட்ட விதிமுறைகள் மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இக்காலகெடுவிற்கு பின்னர் உரிமம் வேண்டி விண்ணப்பிக்காமலும், உரிமம் இல்லாமல் இருப்பின் பண்ணை இயக்கத்தினை நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post வரும் 10ம் தேதிக்குள் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பண்ணைகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Assistant Director ,Fisheries Welfare ,Thiruvallur ,Coastal Regulatory Zone ,Fishermen ,Welfare ,Dinakaran ,
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்