×

மயிலாடுதுறையில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருச்செந்தூர் விரைவு ரயிலில் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மயிலாடுதுறையில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். ரயில் நிலையத்தில் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு, முதலமைச்சரை வழியனுப்பி வைத்தனர்.

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.

அதன்படி, இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை சென்னை, எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.நாளை காலை 10 மணிக்கு கார்மூலம் மயிலாடுதுறை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வை முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கும் மீண்டும் சென்னை வந்தடைகிறார்.

The post மயிலாடுதுறையில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருச்செந்தூர் விரைவு ரயிலில் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Ceremony ,Mayiladudhara ,K. Stalin ,Chennai ,Uddhav Thackeray ,Tiruchendoor Rapid Train ,Chennai Ramampur Railway Station ,District Governor ,Government Ceremony ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...