×

இஷான், ஷ்ரேயாஸ் விவகாரம்: கங்குலி எதிர்ப்பு

மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக இருந்தபோது, கங்குலி தலைவர் பதவியில் இருந்தாலும் ஜெய்ஷாவை மீறி எதையும் செய்ய மாட்டார். இந்த நிலையில் கங்குலி அந்தப் பதவியில் இருந்து சென்ற நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக இருக்கிறார்.இந்த நிலையில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ரஞ்சிப் போட்டியில் விளையாடாததால் அவர்களது ஒப்பந்தம் நீக்கப்பட்டதற்கு கங்குலி எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-

“இஷான் கிஷன் போன்ற வீரர்களிடம் ஜெய்ஷா மற்றும் ரோஜர் பின்னி இல்லையெனில் தேர்வு குழுவினர் கண்டிப்பாக பேசியிருக்க வேண்டும். இஷான் கிசன் ஒன்றும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்ததில்லை. மேலும் வெள்ளை நிற கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி இருக்கிறார். இந்த ஒரு முறை விளையாடவில்லை என்பதற்காக அவர் ஒரு மோசமான வீரராக மாறிவிடுவாரா என்ன? நிச்சயம் கிடையாது. டெல்லி கேப்பிட்டல் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் இம்முறை சையது முஸ்தாக் அலி கோப்பை, விஜய் ஹாசாரே கோப்பை மற்றும் ரஞ்சிக்கோப்பையில் விளையாடினார்கள். ஏன் இஷாந்த் சர்மா கூட ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடினார்.

கலீல் அகமது கூட பல சீசன்களுக்கு பிறகு முழு ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி இருக்கிறார். நான் தனிப்பட்ட முறையில் அனைத்து வீரர்களிடம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உடல் தகுதியை பெறுங்கள் என்று கூறியிருந்தேன். ஒரு சில வீரர்களிடம் மட்டும் தான் நான் விளையாட சொல்லவில்லை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் ரஞ்சி போட்டிகள் விளையாடாமல் போவது இதுதான் முதல் முறையா? நிச்சயமாக இந்த வீரர்கள் எல்லாம் ஓய்வு நேரத்தில் ரஞ்சிப் போட்டியில் விளையாடியிருக்கிறார்கள். இதனால் பிசிசிஐ இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு கங்குலி கூறி உள்ளார்.

The post இஷான், ஷ்ரேயாஸ் விவகாரம்: கங்குலி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ishan ,Shreyas ,Ganguly ,MUMBAI ,Jayshaw ,Union Home Minister ,Amit Shah ,BCCI ,Dinakaran ,
× RELATED சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை