- தேவதானபதி
- தேவதானப்பட்டி
- மட்டுவலவு
- அரிசிகாடி
- பஸ் ஸ்டாண்ட்
- கேட்ரோட்
- சில்வர்பட்டி
- எருமலைநாகன்பதி
- ஜெயமங்கலம்
- தின மலர்
தேவதானப்பட்டி, மார்ச் 3:தேவதானப்பட்டி பகுதியில் அதிகவேகத்தில் செல்லும் ஆட்டோக்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைவதாக புகார்கள் வந்ததையடுத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி மேட்டுவளவு, அரிசிக்கடை, பஸ் ஸ்டாண்ட், காட்ரோடு, சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்கிருந்து இயங்கும் பல ஆட்டோக்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தேவதானப்பட்டியில் இருந்து டி.வாடிப்பட்டி, கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி, ஒத்தவீடு, நால்ரோடு, ஜெயமங்கலம் ஆகிய பகுதிகளுக்கும், அதே போல் ஜெயமங்கலத்தில் இருந்து தேவதானப்பட்டி, குள்ளப்புரம், வைகைஅணை, ஆண்டிபட்டி, மேல்மங்கலம், வடுகபட்டி, யூனியன் ஆபீஸ், பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் போது சிலர் ஒருவரை ஒருவர் முந்திச்செல்கின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.தற்போது தேனி நகர், ஆண்டிபட்டி பகுதிகளில் போலீசார் ஆட்டோக்களை கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.
அது போன்று தேவதானப்பட்டி மற்றும் ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேசன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அதிவேக ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து நடவடிக்கை எடுக்கும் படி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post தேவதானப்பட்டி பகுதியில் அதிவேகமாக செல்லும் ஆட்டோக்கள் appeared first on Dinakaran.