×

கோபி பகுதியில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா ேகாலாகலம்

கோபி, மார்ச் 3: கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட காசிபாளையம், காந்திநகர், மணியம்பாளையம், சிங்கிரிபாளையம் உள்ளிட்ட 15 வார்டுகளிலும் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காசிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூர் கழக திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாகதேவம்பாளையம் ஊராட்சி: கோபி அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சியில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது. கோபி அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சி முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நாகதேவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செங்கோட்டையன் தலைமையில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் டாக்டர்.டி.கதிர்வேல் முன்னிலையில் நடைபெற்றது.

ஊராட்சி பகுதியில் கொடியேற்றி வைத்தும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஊராட்சி முழுவதும் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரசாரம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செங்கோட்டையன் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோடீஷ்வரன், வார்டு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டி.என்.பாளையம்: கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் முதலவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளிப்பட்டியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன் தலைமையில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கலைஞர் திடலில் நலத்திட்ட உதவிகளை ஒன்றிய செயலாளர் சிவபாலன் வழங்கினார். நிகழ்ச்சியில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொடுமுடி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கொடுமுடி ஒன்றிய திமுக சார்பில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.

கொடுமுடி ஒன்றிய திமுக செயலாளர் சின்னசாமி தலைமையில் பைபாஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் மணிக்கூண்டு பகுதியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். இதில், கொடுமுடி பேரூர் கழக செயலாளர் ராஜா கமால்ஹசன், கொடுமுடி பேரூராட்சி மன்ற தலைவர் திலகவதி சுப்ரமணியம், கொடுமுடி பயிரிடுவோர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பரிமளாமணி, திமுக மாவட்ட பிரதிநிதி உமர் உள்ளிட்ட திரளான திமுக கட்சி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், வார்டு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோபி பகுதியில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா ேகாலாகலம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Gobi ,Tamilchelvi Vetrivel ,DMK ,M.K.Stal ,Kasipalayam ,Tamil Nadu ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு