×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல்

புதுக்கோட்டை, மார்ச்3: புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 இடங்களில் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை வனச்சரகத்தில் அரையக்கருப்பர் கோவில், வனசூழலியல் பண்ணை, வேப்பங்குடி, மணியாச்சி காப்புக்காடு. முள்ளூர் காப்புக்காடு, கீரனூர் வனச் சரகத்தில் ஆளடிபெருமுத்துக் காடு, மண்டையூர் காப்புக்காடு, லிங்கமலை காப்புக்காடு, அம்மாசத்திரம், செல்லபெருமாள்பத்தை ஆகிய இடங்களிலும் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது.

திருமயம் வனச்சரகத்தில் வளனார் கல்லூரி, அரிமளம் ஆய்வுப்பண்ணை, ஜெஜெ கல்லூரி, ஊனையூர், ஆதனூர், பொன்னமராவதி வனச்சரகத்தில் செவிலிமலை, அம்மன்குறிச்சி, வார்ப்பட்டு பெரியமலை, ஜீவாநகர், தூத்தூர், அறந்தாங்கி வனச்சரகத்தில் எட்டியத்தளி காப்புக்காடு, குறும்பூர் சாலை, நற்பவளக்குடி, முக்குடி, அழியாநிலை காப்புக்காடு ஆகிய இடங்களிலும் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது.

வனசரக அலுவலர் சதாசிவம், வனசரக அலுவலர்கள், வனவர்கள், வனகாப்பாளர்கள், வன காவலர் மற்றும் 25 நபர்களைக் கொண்டு 5 குழுக்கள் அமைக்கப்பட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.மாவட்டவன அலுவலர். கணேசலிங்கம் இக்கணக்கெடுப்பைத் தொடங்கி வைத்தார். 25 இடங்களில் வனத்துறையினருடன் மன்னர் கல்லூரி விலங்கியல் துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.அறந்தாங்கி வனச்சரக அலுவலர் து. மணிவெங்கடேஷ், புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம். சதாசிவம் உள்ளிட்டோரும் இக்கணக்கெடுப்புக்கான ஏறபாடுகளைச் செய்திருந்தனர்.

இதில் புதுக்கோட்டை வனச்சரகத்தில் நார்த்தாமலை காப்பு காட்டில் 26 வகையான பறவை இனங்களுக்கு 593 எண்ணிக்கையிலான பறவைகளும் காணப்பட்டதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 288 எண்ணிக்கையிலான பறவைகள் கூடுதலாக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,Araiyakarupar ,Temple ,Forestry ,Farm ,Veppangudi ,Maniachi Reserve Forest ,Pudukottai Forestry ,Mullur reserve forest ,Aaladiperumuthu forest ,Kiranur forest reserve ,Mandaiyur ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்