×

பூண்டி ஒன்றியம் சீத்தஞ்சேரி கிராமத்தில் புதிய திமுக அலுவலகம் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை, மார்ச் 3: பூண்டி வடக்கு ஒன்றியம் சீத்தஞ்சேரி கிராமத்தில் புதிய திமுக அலுவலகத்தை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி வடக்கு ஒன்றியம் சீத்தஞ்சேரி கிராமத்தில் திமுக அலுவலகம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்.பொன்னுசாமி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், கிறிஸ்டி, ஆ.சத்தியவேலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ், மோதிலால், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் வக்கில் வெஸ்லி, ரமேஷ், ரவிக்குமார், கஜேந்திரன், சங்கர், சம்பத், பேரூர் செயலாளர் அபிராமி மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசலு, நாகராஜ், ரகு அவைத்தலைவர் ராகவன், ஸ்ரீதேவி, வேல்முருகன், குருமூர்த்தி, நாகபூஷணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு திமுக அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் நம்பாக்கம் வேணு, நளாயிணி, விஜயமாலா, வாசு, யுவராஜ், பிரபாகரன், பூபாலன், சித்ராபாபு, பரந்தாமன், பாபு மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூண்டி ஒன்றியம் சீத்தஞ்சேரி கிராமத்தில் புதிய திமுக அலுவலகம் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Sittancheri village ,Poondi Union ,MLA ,Oothukottai ,DJ Govindarajan ,Seethancheri village ,Bundi North ,Union ,Poondi North Union ,Poondi Union New DMK ,Dinakaran ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்