×

அரசு கல்லூரியில் இணைய வழி கருத்தரங்கு

மோகனூர், மார்ச் 3: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் ”இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இயற்பியல் அறிவியல் மாணவர்களுக்கான ஆராய்ச்சி வாய்ப்புகள்” என்ற தலைப்பில் நேற்று இணையவழி கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். இயற்பியல் துறைத்தலைவர் சின்னுசாமி வரவேற்றார். இக்கருத்தரங்கில் தைவான் நாட்டின் மிங்ஷி தொழில்நுட்ப பல்கலை கழக ஆராய்ச்சி மாணவர் பெருமாள் மற்றும் சேலம் பெரியார் பல்கலை கழக இயற்பியல் துறை ஆராய்ச்சி மாணவர் பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இயற்பியல் துறையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். இக்கருத்தரங்கில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இணையவழியில் பங்கேற்றனர். இயற்பியல் துறை பேராசிரியர் சேதுபதி நன்றி கூறினார்.

The post அரசு கல்லூரியில் இணைய வழி கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Govt ,College ,Moganur ,Department of Physics ,Arignar Anna Government Arts College ,Namakkal ,Principal ,Raja Chief ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள்...