×

திண்டுக்கல்லில் ரூ.1.14 கோடி மதிப்பில் சாலை பணி துவக்கம்

திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல்லில் திருச்சி ரோடு உழவர் சந்தை முதல் டீச்சர்ஸ் காலனி வரை ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்து சாலை பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் பானுப்பிரியா, மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உழவர் சந்தை அருகே அமைந்துள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

The post திண்டுக்கல்லில் ரூ.1.14 கோடி மதிப்பில் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Bhoomi Puja ,Trichy Road Farmers Market ,Teachers Colony ,Union Secretary ,Nedunchezhiyan ,Dinakaran ,
× RELATED மத்திகிரி அரசு பள்ளியில் கலையரங்கம் கட்டும் பணி