×

சாலையோரம் பற்றிய திடீர் தீ வத்தலக்குண்டுவில் பரபரப்பு

வத்தலக்குண்டு, மார்ச் 3: வத்தலக்குண்டுவில் நேற்று உசிலம்பட்டி சாலையோரம் திடீரென தீப்பற்றி செடி, கொடிகளில் பரவ துவங்கியது. அங்கிருந்தவர்கள் இதுகுறித்து உடனே வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் ஜோசப், போக்குவரத்து அதிகாரி வெங்கடேஷ் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையோரம் பற்றிய எரிந்த தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்ததால் அருகில் இருந்த குப்பை கிடங்கிற்கு தீ பராவமல் தப்பியது. கடந்த வாரம் இரவில் இதே பகுதியில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்தனர். எனவே சேவுகம்பட்டி பேரூராட்சியினர் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தீ வைக்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையோரம் பற்றிய திடீர் தீ வத்தலக்குண்டுவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vathalakundu ,Vatthalakundu ,Usilampatti road ,Vathalakund fire department ,Station Officer ,Joseph ,Traffic ,Venkatesh ,Fire Department ,
× RELATED வத்தலக்குண்டுவில் காவல்நிலையம் முற்றுகை