×

குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு டிஜிபி பாராட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

போளூர், மார்ச் 3: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மொடையூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் நேபாள நாட்டை சேர்ந்த கரன்பிஸ்ட் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர். அவரின் நண்பர்களான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சாகீப்ேஷக், முகமதுசர்பராஜ், அருண்ஷேக் ஆகியோர் என கண்டறிந்து மும்பை சென்று குற்றவாளிகளை கைது செய்து போளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட வழக்குகளில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டி போலீஸ் டிஜிபி சங்கர்ஜிவால் நேற்று ேநரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

The post குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு டிஜிபி பாராட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : DGP ,Cooperative Credit Union ,Polur ,Modaiyur ,Tiruvannamalai district ,Inspector ,Vinayakamurthy ,Dinakaran ,
× RELATED உறுப்பினர்களுக்கு டெபாசிட் தொகை