×

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தினசரி திருப்பதி செல்ல ஏற்பாடு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் தினசரி திருப்பதி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலா. திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்தில் இருந்து தினசரி அதிகாலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கிறது.

மேலும் கோயம்பேடு, ரோகினி திரையரங்கிற்கு எதிர்புறம் இருந்தும், பூந்தமல்லி ரோடு திருப்பதி ரோடு இணையும் சந்திப்பு (சங்கீதா ஓட்டல் அருகில்), திருவள்ளூர் பகுதியில் மணவாளன் நகர் இந்திரா காந்தி சிலை அருகில் ஆகிய இடங்களிலும் திருப்பதி சுற்றுலா செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் திருப்பதி செல்ல வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகள் முடி காணிக்கை, விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் தரிசனம் செய்ய ஏற்பாடு, நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது. கீழ் திருப்பதியில் மதிய உணவும், திருத்தணி தமிழ்நாடு ஓட்டல் உணவகத்தில் இரவு உணவும் வழங்கப்படுகின்றது. திருப்பதி சுற்றுலா முடிந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கொண்டு சேர்ப்பதுடன் திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.

The post தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தினசரி திருப்பதி செல்ல ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tamil Nadu Tourism Development Corporation ,CHENNAI ,Managing Director ,Samayamurthy ,
× RELATED புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5...