×

மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துகழகம் அறிவிப்பு

சென்னை: மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்துகழகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; 03.03.2024 அன்று தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 15.30 வரை ரத்து செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதால், அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் காலை 10.00 மணி முதல் மாலை 15.30 மணி வரை தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை மா.போ.கழகம் 03.03.2024 அன்று இயக்கப்படவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துகழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thambaram-Chennai ,Transport Corporation ,Chennai ,Transport Committee ,Southern Railway ,Thambaram- ,Chennai Beach ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு...