×

குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த 1995க்கு பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை!!

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த 1995க்கு பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்தா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலை அம்மாநில பாஜக அரசு அளித்துள்ளது. அதில் 1871 முதல் 1995 வரையிலான 104 ஆண்டுகளில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 1995ம் ஆண்டிற்கு பிறகு குஜராத்தில் புதிதாக ஒரு அரசு மருத்துவ கல்லூரி கூட உருவாக்கப்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

2023ல் மட்டும் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் அரசு கடந்த 2 ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள குஜராத் பாஜக அரசு, கடந்த 2 ஆண்டுகளில் 507 தனியார் செவிலியர் கல்லூரிகளும் ஒரே ஒரு அரசு செவிலியர் கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை உருவாக்கப்போவதாக குஜராத் மாநில பாஜக வாக்குறுதி அளித்து வரும் நிலையில், கடந்த 29 ஆண்டுகளாக அங்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த 1995க்கு பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Gujarat ,Ahmedabad ,Congress ,MLA ,Amit Chawta ,Gujarat State ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...