×

விவசாயம் செழித்து நாடு சுபிட்சம் பெற மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலில் நூதன வழிபாடு: பானையில் கொதிக்கும் பொங்கலை கையில் அள்ளிய பூசாரி

கிருஷ்ணராயபுரம்: விவசாயம் செழித்து நாடு சுபிட்சம் பெற வேண்டி கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலில் கொதிக்கும் பொங்கலை கையில் அள்ளி போட்டு சாமிக்கு படையல் போட்டு நூதன வழிபாடு நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை பகுதியில் வசிக்கும் செல்லாண்டியம்மன் கோயில் குடிபாட்டுக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதம் வெள்ளிக்கிழமைகளில் மாயனூர் செல்லாண்டி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தாண்டு மாசி வெள்ளிக்கிழமையான நேற்று 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சுமார் 3 ஆயிரம் பேர் 50க்கும் மேற்பட்ட மினி ஆட்டோக்களில் ஏறி நேற்று காலை லாலாபேட்டை பகுதியில் இருந்து கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலுக்கு ஒன்று சேர்ந்து புறப்பட்டனர்.

மாயனூர் செல்லாண்டியம்மன் கோயில் எதிரே ஒன்று சேர்ந்து 300க்கும் மேற்பட்ட புதியதாக வாங்கிய மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி தயார் ஆன பிறகு கொதிக்கும் பொங்கல் பானைக்குள் பூசாரி ராமலிங்கம் சாமி அருளுடன் ஒவ்வொரு பானையிலும் கைகளினால் பொங்கல் அள்ளி வேட்டியில் சேகரித்தனர். பின்னர் அதனை மாயனூர் செல்லாண்டியம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாயம் செழிக்கவும், நாடு சுபிட்சம் பெற்று அனைவரும் நலமுடன் வாழ ஆண்டு ஆண்டுகாலமாக இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருவதாக கோயில் குடிப்பாட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.

 

The post விவசாயம் செழித்து நாடு சுபிட்சம் பெற மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலில் நூதன வழிபாடு: பானையில் கொதிக்கும் பொங்கலை கையில் அள்ளிய பூசாரி appeared first on Dinakaran.

Tags : Nuthana ,Mayanur Chelandiyamman ,Krishnarayapuram ,Mayanur ,Chellantiyamman ,temple ,Sami ,Chellandiyamman Temple ,Lalappettai ,Nudana ,Mayanur Chellandiyamman temple ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...