×

கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் கைது

மதுரை: கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்டார். மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த விஜயராகவனை கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதுரை சென்று போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதால் விஜயராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரை தனியார் மருத்துவமனையில் விஜயராகவன் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து நள்ளிரவில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். நள்ளிரவில் மருத்துவமனை முன்பு குவிந்தவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். அதிகாலை மருத்துவமனையில் இருந்து கோவைக்கு விஜயராகவனை போலீசார் அழைத்து சென்றனர்.

இந்நிலையில் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திய விஜயராகவன் பலரிடம் முதலீடு பெற்று ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. ரூ.18,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.6,000 லாபம் கிடைக்கும் எனக் கூறி பலரை ஏமாற்றியதாக கூற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது நிறுவனம் நேர்மையான நிறுவனம் என்று ஒன்றிய அரசு சான்றளித்தது போல போலி ஆவணம் தயாரித்ததாக விஜயராகவன் மீது புகார் அளிக்கப்பட்டது.

யுனிசெஃப் நிறுவனம் டாக்டர் பட்டம் அளித்தது போல போலி ஆவணங்கள் தயாரித்ததாகவும் விஜயராகவன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையைச் சேர்ந்த மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர் சக்தி ஆனந்தனும் விஜயராகவனும் நெருங்கிய நண்பர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விஜயராகவன் நடத்திய வி3 யூடியூப் சேனலில் வர்த்தக மேலாளராக கோவை சக்தி ஆனந்தன் பணியாற்றியதாக தகவல் வெளியாகியது.

அண்மையில் அரசியல் கட்சி தொடங்கிப்போவதாக விஜயராகவன் அறிவிப்பு வெளியிட்டதற்கு சக்தி ஆனந்தன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இருவரும் நண்பர்கள் என்பதால் கோவை சக்தி ஆனந்தன் நடத்தும் மை வி3 ஆட்ஸ் நிறுவனத்துடன் விஜயராகவனுக்கு தொடர்பா உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,YouTube ,Madurai ,Vijayaraghavan ,Ads ,Coimbatore Economic Offenses Unit ,Dhanakankulam, Madurai ,Madurai… ,My V3 Ads Company ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...