×

கசிவுநீர் குட்டையில் இருந்து நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 

சாத்தூர், மார்ச் 2:சாத்தூர் அருகே ராமலிங்காபுரம் பாசன கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் உப்போடை வழியாக இருக்கன்குடி அணைக்கட்டுக்கு போய் சேருகிறது. உப்போடையின் இருபகுதி கரை ஓரத்தில் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகள் அடிக்கடி வறண்டு விடுவதால் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிவந்தன. எனவே கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக வேளாண்மை துறையினர் குமரெட்டியார்புரம் செல்லும் சாலை அருகே உப்போடையில் கசிவுநீர் குட்டை அமைத்தனர்.

அதனால் கடந்த பல ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகளில் போதியளவு தண்ணீர் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் கசிவு நீர் குட்டையின் தண்ணீர் செல்லும் பகுதியில் பல் இடங்களில் ஓட்டை ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி சென்றால் கசிவு நீர் குட்டையில் நீர் இல்லாமல் வறண்டு விடும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறட்சி ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே கசிவுநீர் குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கசிவுநீர் குட்டையில் இருந்து நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chatur ,Ramalingapuram ,Itankudi dam ,Uppodai ,
× RELATED தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்