×

பள்ளிக்கு செல்லும் வழியிலுள்ள சேதமான மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை

 

மண்டபம், மார்ச் 2: வேதாளை அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் உயர் அழுத்த மின்கம்பம் சேதமடைந்த உள்ளதால் மின்கம்பத்தை மாற்ற பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வேதாளை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வேதாளை கிராமம் மற்றும் சிங்க வேலை குச்சி மற்றும் வலையர்வாடி மற்றும் நாடார் குடியிருப்பு இடையர்வாடி உட்பட பல பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

வேதாளை கிராமத்தில் இருந்து ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையின் அருகே இந்த பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளிக்கு இந்த பகுதியின் வழியாக தென் கடற்கரை, அருப்புக்காடு மற்றும் மேற்கு தெரு பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் மேற்கு தெரு வழியாக பள்ளி வருகின்றனர்.

அந்த மேற்கு தெரு பகுதியில் உயர் மின் அழுத்த மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. ஆபத்தை விளைவிக்கும் விதமாக அமைந்துள்ள சேதமடைந்த இந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பம் அமைத்து தர மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பள்ளிக்கு செல்லும் வழியிலுள்ள சேதமான மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Vedalai Government School ,Government High School ,Vedalai ,Union ,Vedalai Panchayat ,Dinakaran ,
× RELATED மண்டபம் கடற்கரை பூங்காவில் பாம்பன்...