×

பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி விவசாயிகளுக்கு கலெக்டர் பாராட்டு

 

ஈரோடு, மார்ச்.2: பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கிய ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கலெக்டர் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம், எண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரதாப் என்ற விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ், பெருந்துறை, நிமிட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயி பிரபு என்பவருக்கு 2ம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வேளாண் இணை இயக்குநர் வெங்கடேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மரகதமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி விவசாயிகளுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Tamil Nadu Government Horticulture ,Hill Crops Department ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...