×

ஒன்றிய அரசை கண்டித்து வணிகர் பேரமைப்பு சார்பில் உண்ணாவிரதம்

 

ஈரோடு, மார்ச்.2: ஒன்றிய அரசு வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வேளாண் உணவு பொருட்களின் கொள்முதலை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்க கூடாது.

உழவர்களையும், வணிகர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் துப்பாக்கி சூடு நடத்தி வரும் ஒன்றிய அரசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசந்திரன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக போராட்டத்தை ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தொடங்கி வைத்து பேசினார். வணிகர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து வணிகர் பேரமைப்பு சார்பில் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Merchants Federation ,Union Government ,Erode ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...