×

வளநாடு பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

 

திருச்சி, மார்ச் 2: திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரம் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டம் சார்பில் கலாஜதா எனும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தேனூர் மற்றும் வளநாடு பகுதிகளில் நடைபெற்றது. வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சந்தனமோி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோமதி துவக்கி வைத்தார்.

திருச்சி பரதாலயா கலைக்குழுவினர் கரகாட்டம், ஒயிலாட்டம், பாடல் மற்றும் நாடகம் மூலம் கலைஞாின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளா்ச்சித் திட்டங்கள், நுண்ணீர் பாசனம், உழவன் செயலின் பயன்பாடு, அட்மா பண்ணைப்பள்ளி, பயிர் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டம், மற்றும் அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தனர். வேளாண்மை அலுவலர் அருண் ஜீலியஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் கலைச்செல்வன் மற்றும் மோகனசுந்தாி ஆகியோர் செய்திருந்தனர்.

The post வளநாடு பகுதியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Valanadu ,Trichy ,Agricultural Technology Management Agency ,ATMA ,Marungapuri ,Thenur ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...