×

பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி அரிசி தாமதமின்றி வழங்க வேண்டும்

 

சீர்காழி,மார்ச் 2: பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி அரிசி தாமதமின்றி வழங்க வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீர்காழி தாலுகா சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யூசுப் ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் நோன்புக் கஞ்சிக்கான பச்சரிசியை தமிழக அரசு சார்பில் பள்ளிவாசல்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 12ம் தேதி புனித ரமலான் நோன்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அரசு அலுவலக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆவணங்கள் சமர்பித்து சரிபார்க்கும் பணிகள் முடங்கியுள்ளது. மேலும் தமிழக அரசின் உத்தரவும் விரைந்து அறிவித்திட வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்ரபாணி, மாவட்ட கலெக்டர் மகாபாரதி வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் கடந்த ஆண்டு சீர்காழி தாலுகா பள்ளிவாசல்களுக்கு சுமார் ஒரு லட்சம் கிலோ தரமான பச்சரிசியை வழங்கி உதவியமைக்காக தமிழக முதல்வர் மற்றும் உணவுத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி அரிசி தாமதமின்றி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Sunnat Jamaat ,Sirkazhi Taluka ,Sunnat Wal Jamaat Federation ,Chief Coordinator ,Muhammad Yusuf ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!