×

3 சாயச்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

பள்ளிபாளையம், மார்ச் 2: பள்ளிபாளையம் பகுதியில் கழிவுநீரை வெளியேற்றிய 3 சாயச்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பள்ளிபாளையம் பகுதியில் 32 சாயம் மற்றும் சலவைச்சாலைகள் இயங்கி வருகின்றன. துணிகளை வெண்மையாக்குவதற்கான அனுமதியை பெற்றுள்ள சலவைச்சாலைகளில் சாயமிடும் பணிகள் நடப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதேபோல், அனுமதி பெறப்பட்ட அளவைவிட பல மடங்கு கழிவுநீரை, குளோரின் பயன்படுத்தி வண்ணம் நீக்கி வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளால் காவிரி ஆறு சாக்கடையாக மாறி குடிநீர் ஆதாரத்தை கெடுப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மணிவண்ணன், உதவி பொறியாளர் சந்தானகிருஷ்ணன், ஈரோடு பறக்கும்படை அதிகாரிகள் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் பகுதிகளில் இயங்கும் சாயச்சாலைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சாயக்கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றிய மூன்று சாயச்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றிய ஒரு சாயப்பட்டறைக்கு ஏன் சீல் வைக்க கூடாது என கேட்டு அதிகாரிகள் நோட்டீசு வழங்கியுள்ளனர்.

The post 3 சாயச்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Pollution Control Board ,Dinakaran ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...