×

கல்லுவிளை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு எல்ஐசி வாகனம்

நாகர்கோவில், மார்ச் 2: எல்ஐசி நிறுவனம் தனது பொன்விழா அறக்கட்டளை மூலம் நாடெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ், வேன் போன்ற வாகனங்களையும், பள்ளிகள், ஆதரவற்ற முதியோரை பேணும் நிறுவனங்களுக்கு கட்டிடம் கட்டவும் உதவி வருகிறது. இந்திய அளவில் இதுவரை 757 உதவித் திட்டங்கள் மூலம் ₹157.45 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்விழா அறக்கட்டளை சார்பில் கல்லுவிளை கருணாலயம் சிறப்புப் பள்ளிக்கு 27 பேர் பயணிக்கக் கூடிய வகையில் ₹21 லட்சம் மதிப்பிலான வேன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எல்ஐசி முதுநிலை கோட்ட மேலாளர் குமார், வணிக மேலாளர் சங்கரன், விற்பனை மேலாளர் அமல்ராஜ், தக்கலை கிளை முதுநிலை மேலாளர் முப்பிடாதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கருணாலயம் சிறப்புப் பள்ளி சார்பில் அருட்சகோதரி மேரி வினயா வாகனத்திற்கான சாவியை பெற்றுக் கொண்டார்.

The post கல்லுவிளை மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு எல்ஐசி வாகனம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Kalluvilai Manavalarchi Kurniyor School ,Nagercoil ,Golden Jubilee Foundation ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு;...