×

பெயின்டர் கொலை வழக்கு நண்பர்கள் 4 பேர் கைது

மதுரை, மார்ச். 2: மதுரை மாவட்டம், சத்திரபட்டியை அடுத்த தொண்டனன்பட்டியைச் சேர்ந்தவர் இளையராஜா (40). பெயின்டரான இவர், கடந்த, 28ம் தேதி சத்திரபட்டி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து, சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து அவரது நண்பர்களான சத்திரபட்டியைச் சேர்ந்த வெள்ளிமலை (29), குணசீலன் (24), வேல்ராஜ் (30), கார்த்தி (32) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில், வெள்ளிமலை உள்ளிட்ட நால்வரிடமும் இருந்து அவர்களின் டூவீலர்கள் மற்றும் செல்போன்களை வாங்கிய இளையராஜா அதனை திரும்ப தரவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த 28ம் தேதி அவர்கள் மது குடித்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் 4 பேரும் சேர்ந்து, இளையராஜாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளிமலை உள்ளிட்ட நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

The post பெயின்டர் கொலை வழக்கு நண்பர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Painter ,Madurai ,Ilayaraja ,Thondananpatti ,Chhatrapatti ,Madurai district ,Chatrapatti ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...