×

இலங்கை -இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

கொழும்பு: இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சானா விஜேசேகரா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் 10.955 மில்லியன் அமெரிக்க டாலர் முழு நிதியுதவியுடன் நெடுந்தீவு, அனலா தீவு மற்றும் நைனா தீவு ஆகிய 3 தீவுகளும் 2025ம் ஆண்டு மார்ச்சுக்குள் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புக்களை பெறும்\\” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கை எரிசக்தி ஆணையம் மற்றும் பெங்களூரை சேர்ந்த யூ சோலார் கிளீன் எனர்ஜி சிஸ்டம்ஸ் ஆகிய நிறவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 530கிலோவாட் காற்றாலை மின்சாரம், 1700கிலோவாட் சூரியசக்தி, 2400கிலோவாட் பேட்டரி மின்சார அமைப்பு, 2500கிலோவாட் டீசல் மின்சார அமைப்புகள் இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும்.

The post இலங்கை -இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,India ,Colombo ,Energy Minister ,Kanchana Wijesekara ,Indian government ,Neduntivu ,Anala Island ,Naina Island ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...