×

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு ரூ.580 கோடி சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலி முறைகேடு வழக்கில் கடந்த 28ம் தேதி கொல்கத்தா, குருகிராம், டெல்லி, இந்தூர், மும்பை மற்றும் ராய்ப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த வழக்கில் ஹவாலா ஏஜென்ட் ஹரி சங்கர் திப்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர். இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர்.

ஆனால் தற்போது துபாயில் வசித்து வருகின்றார். இவர் மகாதேவ் சூதாட்ட செயலியை உருவாக்கியவர்களோடு இணைந்துள்ளார். மேலும் ஸ்கை எக்ஸ்சேஞ்ச் என்ற சட்டவிரோத சூதாட்ட செயலியை வாங்கி இயக்கி வந்துள்ளார். பணமோசடி தடுப்பு சட்ட விதிகளின் கீழ், ஹரி சங்கருக்கு சொந்தமான ரூ.580.78கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

The post மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு ரூ.580 கோடி சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Kolkata ,Gurugram ,Delhi ,Indore ,Mumbai ,Raipur ,Hari Shankar Dibriwal ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு