×

டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றி ஆப்கானை வீழ்த்தி அசத்தியது அயர்லாந்து

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்டில் (ஒரே போட்டி), அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று டெஸ்ட் அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. டாலரன்ஸ் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 155 ரன்னில் சுருண்டது. அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடேர் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 263 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

ஸ்டர்லிங் 52, கேம்பர் 49, டக்கர் 46, மெக்பிரைன் 38, டெக்டர் 32 ரன் எடுத்தனர். ஆப்கான் பந்துவீச்சில் ஜியா உர் ரகுமான் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 108 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கான் 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஹஷ்மதுல்லா 53 ரன், ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹஷ்மதுல்லா 55, குர்பாஸ் 46, நவீத் 25, ஜனத், ஜியா தலா 13 ரன் எடுக்க, ஆப்கானிஸ்தான் 218 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்தது (75.4 ஓவர்).

அயர்லாந்து பந்துவீச்சில் அடேர், மெக்கார்தி, கிரெய்க் யங் தலா 3 விக்கெட், தியோ வான் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, 33.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபாரமாக வென்றது. கேப்டன் பால்பிர்னி 58 ரன், லோர்கன் டக்கர் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி 6 ஆண்டு, 7 போட்டிக்குப் பிறகு அயர்லாந்து அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மார்க் அடேர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றி ஆப்கானை வீழ்த்தி அசத்தியது அயர்லாந்து appeared first on Dinakaran.

Tags : Ireland ,Afghanistan ,ABU DHABI ,Tolerance Oval ,
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!