×

97.62 சதவீத ரூ.2,000 நோட்டு திரும்ப வந்தது: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 பணமதிப்பிழப்புக்குப் பிறகு புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ரூ.2,000 நோட்டு கருப்புப் பண பதுக்கலுக்கு வழி வகுக்கும் எனவும், ஒன்றிய அரசின் இந்த முடிவு தவறானது எனவும் பலரும் தெரிவித்தனர். இந்நிலையில், புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் 19ம் தேதி அறிவித்தது.

மக்கள் இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான அவகாசம் முடிந்த பிறகும், ரிசர்வ் வங்கி கிளைகளில் இவற்றை மாற்றிக் கொள்ளலாம். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 29ம் தேதிப்படி புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டில் 97.62 சதவீதம், அதாவது ரூ.8,470 கோடி மதிப்பிலான நோட்டு திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது.

The post 97.62 சதவீத ரூ.2,000 நோட்டு திரும்ப வந்தது: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : RBI ,MUMBAI ,Union Government ,Dinakaran ,
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...