×

இன்று மீண்டும் துவங்குகிறது நீதி யாத்திரை

மும்பை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகின்றார்.  இந்நிலையில் ராகுல்காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காகவும், டெல்லியில் முக்கிய கூட்டங்களில் ராகுல்காந்தி பங்கேற்றதாலும் கடந்த 26ம் தேதி முதல் நேற்று வரை யாத்திரைக்கு ஓய்வு விடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து ராஜஸ்தானின் டோல்பூரில் இருந்து நீதி யாத்திரை இன்று தொடங்குகின்றது. பின்னர் இன்றே யாத்திரை மத்தியப்பிரதேசத்திற்குள் நுழைகிறது. பின்னர் வருகிற 10ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மகாராஷ்டிராவிற்குள் நுழைகின்றது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

The post இன்று மீண்டும் துவங்குகிறது நீதி யாத்திரை appeared first on Dinakaran.

Tags : Justice Yatra ,MUMBAI ,Former ,Congress ,President ,Rahul Gandhi ,India Unity Justice Yatra ,Manipur ,Cambridge University ,Delhi ,Dinakaran ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்