×

டிடிவி.தினகரனுக்கு எதிரான வழக்கு ரத்து

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட முருகன் என்பவரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, 10 கார்கள் மற்றும் 40 இரு சக்கர வாகனங்களுடன் சென்றதுடன், பட்டாசுகளை வெடித்து இடையூறு ஏற்படுத்தி, தேர்தல் விதிகளை மீறியதாக, கமுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டி.டி.வி.தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில், இந்த குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், கடந்த 2021 மார்ச் மாதம் நடந்த நிகழ்விற்கு 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டி.டி.வி.தினகரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post டிடிவி.தினகரனுக்கு எதிரான வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : DTV.Thinakaran ,Chennai ,2021 assembly elections ,DTV ,Dinakaran ,Murugan ,AAMUK ,Mudugulathur ,
× RELATED “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான...