×

கட்டுமான பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரதம் வாபஸ்

கட்டுமான பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. கல்குவாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்களின் கூட்டமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர்  சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்…

அப்போது பேசிய தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரிசங்கு
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் கட்டமைப்பினரும், அரசு பொதுப்பணிதுறை ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து கடந்த மூன்று நாட்களாக கல்குவாரியில் ஒரே ஆண்டில் மூன்று முறை ஏற்பட்ட விலையேற்றத்தை குறைக்க  உண்ணாவிரத போராட்டத்திலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வந்தோம்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு எங்களை அழைத்து பேசினார். அப்போது, மார்க்கெட்டில் தற்பொழுது உள்ள விலையையும் கல்குவாரியில் ஏற்றப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு முதலமைச்சரோடு ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியிருந்தார். தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவை எங்கள் சங்கத்தினர் இன்று சந்தித்து பேசினோம். வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிடமாறு அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர் எ.வ வேலு அறிவுறுத்தல் படி எங்களது அனைத்து போராட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது. நாங்கள் தொடர்ந்து பணியாற்றி அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்து செல்ல அரசுக்கு உரிய பங்களிப்பை தருவோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்ற அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றிகள் என தெரிவித்தார்

The post கட்டுமான பொருட்கள் விலையேற்றம் தொடர்பாக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரதம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Public Works ,Public Works Department ,Confederation of Tamil Nadu Highway Contractors ,TMC ,Jalli ,M Sand ,Kalguvari ,Works ,Dinakaran ,
× RELATED பருவாய் குட்டையில் பொதுப்பணித்துறை ஆய்வு