×

விலங்குகளுக்கு நரகமாக மாறிய சென்னை ப்ளூ கிராஸ் காப்பகம்: சாக்கு மூட்டையில் குவியல் குவியலாக நாய்கள், பூனைகளின் உடல்

சென்னை: சென்னை ப்ளூ கிராஸ் விலங்குகள் காப்பகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது சாக்குமூட்டையில் கட்டிவைக்கப்பட்டிருந்த நாய்கள், பூனைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்வலர்களின் புகார் எதிரொலியாக வேளச்சேரியில் உள்ள ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின் விலங்குகள் காப்பகத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தெருநாய்கள் பூனைகள் உள்ளிட்ட விலங்குகள் மிக மோசமான நிலையில் அடைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டு பிடித்தனர். அங்கிருந்த சில சாக்குமூட்டைகளை பிரித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதில் 2 நாய்கள் 21 நாய் குட்டிகள் மற்றும் 15 பூனைக்குட்டிகளின் உடல்கள் கட்டிவைக்கப்பட்டிருந்தன.

முறையான விலங்குகள் பராமரிப்பு மற்றும் ஆவணங்கள் கூட இல்லை என்றும் சோதனையின் போது ஒரு மருத்துவர் கூட இல்லை என்பதையும், காப்பகத்தில் விலங்குகளுக்கு கெட்டுப்போன உணவுகளே வழங்கப்பட்டு வந்ததையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதை அடுத்து சென்னை ப்ளூ கிராஸ் விலங்குகள் காப்பகத்தின் அவலநிலை குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஆய்வு குழு விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளது.

The post விலங்குகளுக்கு நரகமாக மாறிய சென்னை ப்ளூ கிராஸ் காப்பகம்: சாக்கு மூட்டையில் குவியல் குவியலாக நாய்கள், பூனைகளின் உடல் appeared first on Dinakaran.

Tags : Chennai Blue Cross ,Chennai ,Chennai Blue Cross Animal Archive ,Tamil Nadu ,Blue Cross of India ,Cross ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...