×

சிறப்பு குறைதீர் முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

 

பெரம்பலூர், மார்ச் 1: பெரம்பலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட வரு வாய் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் மாற்றுத் திறனா ளிகள் சிறப்புகுறை தீர்க் கும் நாள் கூட்டம் நேற்று (29ம்தேதி) நடைபெற்றது. கூட்டத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய, காதுகேளாத மாற்றுதிறனாளிகள் என மொத்தம் 27 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அதில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 3 நபர்கள், இலவச வீடுவேண்டி 7 நபர்கள், உதவித்தொகை வேண்டி 3 நபர்கள், வேலை வாய்ப்பு வேண்டி 1 நபர் என 14 பேர் பொதுவாகவும், 13 மனுக்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்தும் என அளிக்கப்பட்ட 27 மனுக்கள் பெறப்பட்டது.
அதில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,800 மதிப்பில் சக்கர நாற்காலியும், 1 மாற்றுத் தினாளிக்கு ரூ.2,780 மதிப்பில் காதொலி கருவியும் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றத்திறனாளி கள் நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சிறப்பு குறைதீர் முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,SPECIAL DISABILITY REDUCTION DAY ,Varu Vai Kotatshiar Aluva Lag ,Perambalur District ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை